தமிழ்நாடு அரசின் உத்தரவில் ரூ.499 கோடி மதிப்பில் 29 மாவட்டத்திற்குட்பட்ட 1,829 ஏரிகளில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள், நீர்வள ஆதார துறையினரால் திட்டமிடப்பட்டு விவசாய சங்கங்கள், ஆயக்கட்டுதாரர்கள், பயன்பாட்டாளர் சங்கங்கள் மூலமாக செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின்படி, விழுப்புரம் மாவட்டம் அரியலூர் திருக்கை ஏரியில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளில் ஏரியின் கரையில் உள்ள முட்புதர்களை அகற்றுதல், கரையை பலப்படுத்துதல், மதகு சீர்செய்தல், தடுப்புச்சுவர் அமைத்தல், வரத்து வாய்க்கால் தூர் வாருதல், ஆக்கிரமிப்பை அகற்றி எல்லைக் கற்கள் நடுதல் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார்.