விழுப்புரம்: 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 27) விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர்," இன்னார்தான் படிக்க வேண்டும் என்று இருந்ததை மாற்றிய இயக்கம்தான் திமுக. அனைத்து தரப்பினர் படித்து வேலைக்கு செல்கின்றனர் என்றால், அதற்கு திராவிட இயக்கமும் அதன் தலைவர்களும் தான் காரணம்" என்றார்.
விழாவுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்டாலினின் புகைப்படம் இல்லை
இந்நிகழ்வில், அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், அன்பில் மகேஷ்பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முதலமைச்சர் வரும் வழியில் வரவேற்பு தோரணங்களோ, மூன்றடுக்கு பாதுகாப்போ எதுவும் இல்லை. மேலும், விழா மேடையில் முதலமைச்சரின் புகைப்படம் இடம்பெறவில்லை.
நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கல்வி திட்டத்தை ஒத்திருப்பதாக திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விழா மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெறவில்லை இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ்.,சின் கல்விக் கொள்கையைப் பரப்புவதே ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்‘ - கி.வீரமணி குற்றச்சாட்டு