விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தூய்மை காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் இவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.82 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தாங்கள் பெரும் ஊதியம் தங்களது குடும்பச் செலவுக்கும், குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்கும் போதுமானதாக இல்லை என்றும் தங்களது ஊதியத்தை நாளொன்றுக்கு ரூ.250 ஆக உயர்த்தி வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.