விழுப்புரம்: தீபாவளி பண்டிகை திருநாளில் அதிகம் ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்த்து, பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நாளை (நவ.14) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசு வெடிப்பதற்கான சில வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில், "தீபாவளி பண்டிகை மற்றும் விழா காலங்களில் பட்டாசு வெடிப்பதால் எழும் ஓசை தாற்காலிக செவிட்டு தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டு தன்மையையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, ஒளித்திருநாளான தீபாவளி பண்டிகையில் நமது கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும், விபத்துகள் ஏற்படாமல் இருக்க அதிக சத்தமில்லாத பட்டாசுகளை தவிர்த்து விபத்தில்லா தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும்.