தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்!' - குழந்தைகள்

விழுப்புரம்: தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

File pic

By

Published : Jun 12, 2019, 12:10 PM IST

நாடு முழுவதும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் (ஜூன் 12) இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்திய அரசிலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது மக்களின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எவ்வித பணிகளில் ஈடுபடுத்த மாட்டேன் என்றும், அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன் என்றும், குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் ஆட்சியர்


இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர் நலத்துறை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.

இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் முனுசாமி, வருவாய் அலுவலர் பிரியா, தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details