விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமம் வடகரை தாழனூர். இந்த கிராமத்தில் உள்ள முனியப்பன் என்பவரது மூன்று வயது மகள் பூஜா, வீட்டின் அருகில் உள்ள வளைவு சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணி ராஜா(23) திருமலைப்பட்டு பகுதிக்கு ஆட்டோவில் சவாரி சென்றுவிட்டு, மீண்டும் வடகரை தாழனூர் நோக்கி வந்துள்ளார்.
ஆட்டோ மோதியதில் மூன்று வயது சிறுமி உயிரிழப்பு - ஓட்டுநர் கைது! - hospital
விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமியின் மீது ஆட்டோ மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அக்குழந்தை உயிரிழந்தது.
வடகரை தாழனூர் வளைவு சாலையில் வந்தபோது, சாலையின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்த பூஜாவின் மீது ஆட்டோ மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. பின்னர் அருகில் இருந்தவர்கள் அரகண்டநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த காவலர்கள் மணி ராஜா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.