தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டிவனம் அருகே 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வல்லுறவு - பலாத்காரம்

விழுப்புரம்: 10-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளான இரண்டு சிறுமிகளிடம் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

child abuse

By

Published : Jul 19, 2019, 6:47 PM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள தெண்ணீர்குணம் கிராமத்தில் ஆறு வயதுள்ள நீலவேணி, எட்டு வயதுள்ள யுவராணி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகிய சிறுமிகள் வசித்துவருகின்றனர். இருவரும் சகோதரிகள் ஆவர்.

இந்நிலையில், இந்த இரண்டு சிறுமிகளை அதேப் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக கூட்டு பாலியல் வல்லுறவு செய்துவந்துள்ளனர்.

இது குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் தாய், குழந்தைகள் பாதுகாப்புக் குழுவிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு சிறுமியிடம் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினர் நேரில் சென்று விசாரித்தனர்.

தொடர்ந்து அவர்கள் புதுச்சேரி அரியாங்குப்பம் அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மற்றொரு சிறுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details