தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! - வழக்கு விசாரணை

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கின் விசாரணையை விழுப்புரம் நீதிமன்றம் நாளை(டிசம்பர் 2) ஒத்திவைத்துள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

By

Published : Dec 1, 2022, 12:37 PM IST

விழுப்புரம்:கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புப் பணிக்காக சென்ற பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) மீதும், புகாா் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இது தொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய டிஜிபி சீமா அகா்வாலும், 25-ஆம் தேதி அப்போதைய டிஜிபி ஜே.கே.திரிபாதியும் நீதிமன்றத்தில் ஆஜராகி, சாட்சியம் அளித்தனா். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபியும், முன்னாள் எஸ்.பி.யும் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

இதனைத் தொடா்ந்து, அப்போதைய உள்துறைச் செயலரும், தற்போதைய வருவாய் நிா்வாக ஆணையருமான எஸ்.கே.பிரபாகா் நவம்பா் 30-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆா்.புஷ்பராணி உத்தரவிட்டிருந்தாா்.

இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பு சாட்சிகளாக அழைக்கப்பட்டிருந்த எஸ்.கே.பிரபாகா் ஆஜராகவில்லை. இதனைத்தொடர்ந்து இவ்வழக்கின் மீதான விசாரணையை நாளை வெள்ளிக்கிழமை (டிசம்பா் 2) ஒத்திவைத்து நீதிபதி ஆா்.புஷ்பராணி உத்தரவிட்டாா்.

இதையும் படிங்க:மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details