விழுப்புரம் முன்னாள் மக்களவை உறுப்பினர் ரா.லட்சுமணன் ஏற்பாட்டில் விழுப்புரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் நேற்று (ஆகஸ்ட் 29) திமுகவில் இணைந்தனர். விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு திமுக எம்எல்ஏ பொன்முடி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
ஊரடங்கை மீறியதாக திமுக எம்எல்ஏ பொன்முடி மீது வழக்குப்பதிவு - Covid-19
விழுப்புரம்: ஊரடங்கை மீறியதாக திமுக எம்எல்ஏ பொன்முடி, முன்னாள் எம்பி லட்சுமணன் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
case has been registered against DMK for violating the rule
இந்நிலையில், விழுப்புரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாகவும், நோய் தொற்று பரவும் என தெரிந்தே கூட்டம் நடத்தியதாகவும் பொன்முடி, முன்னாள் எம்பி லட்சுமணன் உள்ளிட்ட 317 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் விழுப்புரம் தாலுக்கா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.