தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நபிகளை தவறாகச் சித்தரித்து கார்டூன் வரைவோம்' - எச்சரிக்கை விடுத்த கார்டூனிஸ்ட் கைது - controversy twitter post

விழுப்புரம்: நபிகள் நாயகம் குறித்து தவறாக சித்தரித்து கார்டூன் வெளியிடுவோம் என சமூக வலைதளங்களில் தெரிவித்த கார்டூனிஸ்ட் சுரேந்திரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கார்டூனிஸ்ட் வர்மா கைது  திருவெண்ணை நல்லூர்  cartoonist  cartoonist varma  controversy twitter post
'நபிகளை தவறாக சித்தரித்து கார்டூன் வரைவோம்' எச்சரிக்கை விடுத்த கார்டூனிஸ்ட் கைது

By

Published : Jul 14, 2020, 12:59 PM IST

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள டி.குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் (எ) சுரேந்திர குமார். கார்டூனிஸ்ட்டான இவர், நபிகள் நாயகத்தைத் தவறாகச் சித்தரித்து கார்டூன் படம் வெளியிடுவோம் என தொடர்ந்து சமூக வலைதளங்களில் தெரிவித்துவந்தார்.

இந்து மதக் கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுவரும் ஒரு யூடியூப் சேனலுக்கு எதிராக, அவர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதையடுத்து விழுப்புரத்தைச் சேர்ந்த ரியாஸ் அலி என்பவர் கொடுத்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் சுரேந்திர குமாரைக் கைதுசெய்தனர்.

அவர் மீது பிரிவினையை ஏற்படுத்துதல், மத நம்பிக்கைக்கு எதிராகச் செயல்படுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவர் இதற்கு முன்பாக திருமாவளவனை அவதூறாகச் சித்தரித்து கார்டூன் வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:செங்குன்றம் அருகே 42 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details