திண்டுக்கல் ஆர்எம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான மணிகண்டன், பிரபு ஆகியோர் சென்னையிலுள்ள டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் வாடகைக்கு கார் எடுத்துள்ளனர். இருவரிடமும் முறையான ஓட்டுநர் உரிமம், முகவரிச் சான்றுகள், வைப்புத் தொகையை பெற்றுக்கொண்டு நிறுவனத்தினர் காரை ஒப்படைத்துள்ளனர். வெகு நேரமாகியும் காரை ஒப்படைக்காததால் சந்தேகமடைந்த டிராவல்ஸ் நிறுவனத்தினர், காரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி கொண்டு அவர்கள் சென்ற பகுதிகளை சோதனையிட்டனர். அதில் சகோதரர்கள் இருவரும் ஆந்திரா சென்று மீண்டும் சென்னை திரும்பியது தெரியவந்தள்ளது. சென்னையில் காரை ஒப்படைக்காததால் காரில் ஏதாவது கடத்தப்படலாம் என்ற சந்தேகத்தில் கார் நிறுவனம் சார்பில் மாநகர காவல்துறைக்கு தகவல் கொடுத்தது.
காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ் - மாட்டிக்கொண்ட கடத்தல்காரர்கள் - KANJA
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 120 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, மாநகரக் காவல்துறையினர் செங்கல்பட்டு, விழுப்புரம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்வதை அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்த காரை நிறுத்து சோதனை செய்தனர். அதில் 1.5 கிலோகிராம் எடை கொண்ட 64 பாக்கெட்டுகளில், 120 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஆந்திர, தமிழக காவல்துறையினர் காரை சோதனை செய்ய முயற்சிக்கக் கூடாது என்பதற்காக கண்ணாடியில் வழக்கறிஞர் என்பதைக் குறிக்கும் ஸ்டிக்கரை ஒட்டி காரை இயக்கியது விசாரணையில் தெரியவந்தது. மேலும், விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.