விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிட நலத் துறையில் அலுவலராகப் பணியாற்றியவர் துணைவேந்தன். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் விடுதி காப்பாளிரிடம் பணி மாறுதலுக்கு ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி மோகன், ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் துணைவேந்தனுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.