விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கள்ளக்குறிச்சி-சேலம் தேசிய புறவழிசாலையில், பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மோடி குறித்து அவதூறு பேச்சு: பாஜகவினர் சாலை மறியல்! - போலீஸாரை கைதி செய்துக்கோரி
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே பிரதமர் மோடியை அவதூராக பேசிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
BJP protest
மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு பகுதியில் உள்ள பாஜக கட்சியிக்கு சொந்தமான கொடி, கல்வெட்டை காவல் துறையினர் உடைத்தும், பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாகக் கோரி சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து நீண்ட நேரத்திற்கு பிறகு வந்த காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர். இதனால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.