விழுப்புரம் மாவட்ட சமூக பாதுகாப்பு மற்றும் காவல் துறை ஆகியவை இணைந்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புணர்வுப் பேரணியை இன்று விழுப்புரத்தில் நடத்தின.
இப்பேரணியை விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார் தொடங்கிவைத்தார். பின் அதனை விழுப்புர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமால் வழிநடத்தினர்.
குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியானது நகரின் முக்கியச் சாலைகளின் வழியே நடைபெற்றது. இதில் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்திக் கொண்டு பள்ளி மாணவிகள் ஊர்வலமாகச் சென்றனர்.
மேலும் இதில் ஆசிரியர்கள், சமூக நல அலுவலர்கள், காவல் துறையைச் சேர்ந்தவர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.