கள்ளக்குறிச்சி அருகே உள்ள அசகளத்தூர் கிராமத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை எனக்கூறி அனைத்திந்திய கிராமப்புற விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.
அடிப்படை வசதிகள் கோரி பட்டினிப் போராட்டம் - உண்ணாவிரத போராட்டம்
விழுப்புரம்: அசகளத்தூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி அப்பகுதி மக்கள் பட்டினிப் போராட்டம் நடத்தினர்.
hunger strike
கிராமத்தில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க வேண்டுமெனவும், மூன்றாண்டுகளாக நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க மையூரா நதியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர். மேலும் அசகளத்தூர் கிராமத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்கள் பயணிகள் ரயில்கள் நின்று செல்ல வேண்டும், விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.