தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ஒரு டன் மாம்பழங்கள் பறிமுதல்! - mango

விழுப்புரம்: செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட ஒரு டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்ப ட்ட ஒரு டன் மாம்பழங்கள் பறிமுதல்

By

Published : May 21, 2019, 7:08 PM IST

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தட்சணாமூர்த்தி தலைமையில் மாவட்டதில் உள்ள மாம்பழக் கடைகள் மற்றும் பழ குடோன்களில் இன்று ஆய்வு செய்யப்பட்டது.

இதில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ஒரு டன் மாம்பழங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் வியாபாரிகளை எச்சரித்தனர்.

இந்த ஆய்வில் விழுப்புரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின் ராஜரத்தினம், உளுந்தூர்பேட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன், கள்ளக்குறிச்சி உணவு பாதுகாப்பு அலுவலர் முருகன், கண்டமங்கலம் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பு பழனி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details