விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில், நேற்றிரவு கோட்டக்குப்பம் சோதனைச் சாவடியில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சொகுசு காரை மடக்கி சோதனை செய்ததில் விலை உயர்ந்த 72 புதுச்சேரி மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
சொகுசு காரில் மது கடத்தல்: ஒருவர் கைது - luxury car
விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே சொகுசு காரில் புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சொகுசு கார்
இதனையடுத்து, 72 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், காரில் இருந்த கோவிந்தசாமி என்பவரையும் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் மதுபாட்டில்கள் சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. கைபற்றப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.15 ஆயிரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.