போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. வினோத் இயக்கியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அஜித் படத்துக்கு சென்றவர்களுக்கு விதை பந்துகள் வழங்கல்! - விழுப்புரம்
விழுப்புரம்: திருக்கோவிலூரில் அஜித் படத்துக்கு சென்ற அனைவருக்கும், இளைஞர்கள் சார்பில் இலவச விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள மூன்று திரையரங்குகளில் 'நேர் கொண்ட பார்வை' படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளான நேற்று திரைப்படத்தை பார்க்க வந்த அனைத்து ரசிகர்களுக்கும் 'விதைவிருட்சம் அறக்கட்டளை' மற்றும் 'வானவில் விதைப்பந்து தயாரிக்கும் இளைஞர்கள் குழு' இணைந்து 10 ஆயிரம் விதை பந்துகளை இலவசமாக வழங்கினர்.
முதல் காட்சி முடிந்து வெளியே வந்த அனைத்து ரசிகர்களுக்கும் இளைஞர்கள் குழு தனித்தனியாக நின்று விதைப்பந்துகளை வழங்கினார்கள். இதேபோல் ஒவ்வொரு முறையும் வழங்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். பேனர்கள் வைக்கும் வழக்கத்தை விடுத்து இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.