இதுத்தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, "மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அலுவலர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இல்லையெனில் உடனடியாக ஹெல்மெட் அணியாத காவலர்களுக்கு சார்ஜ் வழங்கப்படும். அதேபோல் மாவட்டத்தில் திருட்டு உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறக்கூடும் என்று சந்தேகிக்கும் இடங்களில் சிசிடிவி கேமரா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மணல் கடத்தலுக்கு உடந்தையாக காவல்துறை செயல்பட்டால் நடவடிக்கை - complicity
விழுப்புரம்: மணல் கடத்தலுக்கு உடந்தையாக காவல்துறையினர் செயல்பட்டால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
ஜெயக்குமார்
மேலும் மணல் கடத்தலுக்கு உடந்தையாக காவல்துறையினர் யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் விரைவில் காவல்துறை சார்பில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் நூலகங்கள் திறக்கப்படும்" என்றார்.