விழுப்புரம் மாவட்டம் கமலா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தானப்பன். இவரது மகன் கதிர் (எ) கதிரவன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கதிரவன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று, கதிரவனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை உத்தரவிட்டார்.