விழுப்புரம்:மாவட்டத்தில் பெய்த கனமழையை கருத்தில் கொண்டு மாணவர்கள் மழையால் பாதிப்பு அடையக் கூடாது என மாவட்ட ஆட்சியர் மோகன் இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தார்.
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் ஏமப்பூர் கிராம பகுதியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் பள்ளி செல்ல மறுத்து மண் தரையில் அழுதுப் புரண்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.