விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டுவருகிறது. அந்த வகையில் விழுப்புரம் புறவழி எல்லையில் உள்ள ஜானகிபுரத்தில் இருந்து கெங்கராம்பாளையம் வரை அதிவேக சாலை அமைத்து, வில்லியனுார் வரை நான்கு வழிச்சாலையாக 29 கிலோமீட்டர் தொலைவில் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அடுத்தாண்டுக்குள் விழுப்புரத்தில் புதிய மேம்பாலம்
விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அடுத்தாண்டுக்குள் புதிய மேம்பாலம் வரவுள்ளது
Etv Bharat
இதனிடையே சென்னை கத்திப்பாரா மேம்பால பாணியில் யானையின் தும்பிக்கை போன்றதொரு வடிவமைப்பில் ரூ. 1,013 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் 2023 ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக முடிக்கப்பட்டு மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எஸ்சி-க்கு வீடு கிடையாது... குல தெய்வத்துக்கு ஒத்துக்காது... மறுக்கும் உரிமையாளாரின் வீடியோ...