விழுப்புரம்:பெற்ற குழந்தையை தாய் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செஞ்சி அருகே மணலப்பாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். இவருக்கும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துளசி(23) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் கோகுல்(4), பிரதீப்(2) உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
குழந்தையை தாக்கி வீடியோ பதிவு
இதன் காரணமாக துளசி கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது இளைய மகன் பிரதீப்பை அடிக்கடி கடுமையாக தாக்கி அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த வடிவழகன் துளசி மீது சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, குழந்தைகளை தந்தையிடம் விட்டுவிட்டு ஆந்திராவில் தனது தாய்வீட்டுக்கு துளசி சென்று விட்டார்.