விழுப்புரம்:சாலாமேடு பகுதியைச் சேர்ந்த ரவிராஜன் (வயது 37) வங்கி ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த மார்ச் 19-ம் தேதியன்று, செல்போன் வாட்ஸ்அப் வாயிலாக ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அந்த குறுந்தகவலில், பகுதி நேர வேலை இருப்பதாகவும், இதனை செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ரவிராஜனின் டெலிகிராம் ஐ.டி.யை மர்ம நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அந்த பகுதி நேர வேலை குறித்த ஒரு லிங்கையும் அனுப்பியுள்ளனர். இதைக் கண்ட ரவிராஜன், அந்த லிங்கிற்குள் சென்றுள்ளார். மேலும், அதில் புதிய கணக்கை தொடங்குவதற்காக பாஸ்வேர்ட் மற்றும் யூசர் ஐ.டி.யையும் பதிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரவிராஜனை தொடர்புகொண்ட மர்ம நபர்கள், கிரிப்டோ கரன்சியில் நீங்கள் சிறிய தொகையை முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய ரவிராஜன், முதலில் 1,000 ரூபாயை முதலீடு செய்து, ரூ. 1,580ஆக இலாபம் பெற்றுள்ளார். பின் இரண்டாவது முறையாக ரூ. 3,000 செலுத்தி, ரூ. 4,930ஆக இலாபம் அடைந்துள்ளார்.