கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள அண்ணா நகர் மேம்பாலம் அருகே, சென்னையிலிருந்து காங்கேயம் சென்ற மினி டெம்போவில் வடமாநில இளைஞர்கள் 11 பேர் உட்பட 14 பேர் பயணம் செய்தனர். அப்போது கோவையிலிருந்து சென்னை நோக்கி 26 பயணிகளுடன் சென்ற சொகுசுப் பேருந்தின் மீது, மினி டெம்போ அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
டெம்போவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 10 பேர் பலி!
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் மினி டெம்போவும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து
இதில், மினி டெம்போவில் சென்ற வடமாநில இளைஞர்கள் ஏழு பேர் மற்றும் தனியார் சொகுசுப் பேருந்து ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் சென்ற கள்ளக்குறிச்சி காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Last Updated : Jul 18, 2019, 11:28 AM IST
TAGGED:
9 பேர் பலி