தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ரூ. 68 கோடியில்88 சமத்துவபுரத்தை சீரமைக்க நடவடிக்கை" - அமைச்சர் ஐ.பெரியசாமி - செஞ்சி மஸ்தான்

தமிழ்நாடு முழுவதும் ரூ.68 கோடி செலவில் 88 சமத்துவபுரங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி

By

Published : Jan 29, 2023, 9:16 AM IST

அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

விழுப்புரம் அடுத்த பனமலை ஊராட்சியில் அமைந்துள்ள சமத்துவபுரம் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்று வரும் புதிய கட்டட பணிகளை, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேற்று (ஜனவரி 28) ஆய்வு செய்தனர். அதன்பின் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்தாண்டு 148 சமத்துவபுரம் ரூ.190 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது. இந்தாண்டு 88 சமத்துவபுரம் ரூ.67 கோடி செலவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் சமத்துவபுரத்தினை கண்டுகொள்ளாமலையே அரசு செயல்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் கிராம மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதால் கிராம சாலைகளை மேம்படுத்த பத்தாயிரம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்க 4 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதால் அந்த பணிகள் ஒருமாதகாலத்தில் தொடங்கப்படும். ஆண்டுக்கு 10 ஆயிரம் கிலோ மீட்டர் வீதம் இனி கிராமப்புற சாலைகள் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "சேது சமுத்திரம் திட்டம் பொருளாதாரத்தை உயர்த்தும்" - வைகோ

ABOUT THE AUTHOR

...view details