தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் 83 பள்ளிகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள்! - Villupuram

விழுப்புரம்: தெற்கு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் விழுப்புரம் அரசுக் கலை கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

விளையாட்டு போட்டிகள்!

By

Published : Aug 14, 2019, 8:22 AM IST

Updated : Aug 14, 2019, 9:33 AM IST

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, அரசு மேல்நிலைப்பள்ளி கீழ்பெரும்பாக்கம் ஆகியவை இணைந்து, விழுப்புரம் தெற்கு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றன. விழுப்புரம் அரசுக் கலை கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 1ஆம் முதல் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில், 83 அரசு மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

83 அணிகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள்!

இதில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கபடி, ஹாக்கி, கூடைபந்து, கைபந்து, கால்பந்து, கோ-கோ, சதுரங்கப் போட்டி, பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றிபெறுபவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெறுவார்கள்.

Last Updated : Aug 14, 2019, 9:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details