விழுப்புரம்: திண்டிவனம் அருகே செஞ்சி சாலையில் 'அம்மா உணவகம்' அமைந்துள்ளது. இந்நிலையில் வைரபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை(40), பாஞ்சாலம், பெலாக்குப்பம், புறங்கரை, ரோசனை ஆகிய பகுதியைச் சேர்ந்த குமரேசன், பிரசாத், வீர கண்ணன், குழந்தைசாமி, ஜெயந்தி, வெங்கடேசன் ஆகியோர் இங்கு தினமும் உணவு சாப்பிட்டுவிட்டு கட்டட வேலைக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில், நேற்று (டிச.12) காலை இவர்கள் வழக்கம்போல இந்த அம்மா உணவகத்திற்கு சென்று சாப்பிட்டனர். இந்நிலையில் ஏழுமலை சாப்பிட்ட தட்டில் பல்லி இருந்ததாகவும், இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஏழுமலை உடனடியாக அம்மா உணவகத்தில் இருந்த ஊழியர்களிடம் இது பற்றி கேட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் சமைத்து வைத்திருந்த உணவுகள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்தினர்.