தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

55வது ஆரோவில் உதய தினம் - கூட்டுதியானத்தில் ஈடுபட்ட மக்கள் - Villupuram

புகழ்பெற்ற ஆரோவில்லில் நேற்று நடைபெற்ற 55-வது உதய தினத்தில் கூட்டு தியானம் கடைபிடிக்கப்பட்டது.

மவுனம் காத்த 55வது ஆரோவில் உதய தினம்!
மவுனம் காத்த 55வது ஆரோவில் உதய தினம்!

By

Published : Mar 1, 2023, 6:09 PM IST

55வது ஆரோவில் உதய தினம் வீடியோ

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் சர்வதேச சுற்றுலா நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை உருவாக்க அன்னை மிரா அல்பாசா தலைமையில், கடந்த 1968ஆம் ஆண்டு பிப்ரவரி 28இல் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. இதனை ஒட்டி, ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆரோவில் நகரின் 55-வது உதய தினம் நேற்று (பிப்.28) கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு, நேற்று அதிகாலை ஆரோவில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில் போன் பயருடன் (Born Fire) கூட்டு தியானம் நடைபெற்றது. இதில் ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டு, உலக அமைதி வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். இதற்காக ஆரோவில் முழுவதும் நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வீடியோ: "சார்பட்டா மாரியம்மா" நத்தம் மாரியம்மன் கோயிலில் தரிசனம்

ABOUT THE AUTHOR

...view details