தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரோந்து கவலர்களை தாக்கி 4 பேர் கைது - குடிபோதையில்

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை தாக்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

vizhu

By

Published : Aug 4, 2019, 12:33 AM IST

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமம் வி.புத்தூர். இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி எதிரே மகேந்திரன், புகழேந்தி, அசோக்குமார், சுரேஷ் ஆகிய நால்வரும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, இரவு ரோந்து பணியில் இருந்த அரகண்டநல்லூர் காவல் துறையினர், பள்ளி நுழைவு வாயில் எதிரே மது அருந்திக் கொண்டிருந்த அந்த நால்வரையும் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் மதுபோதையில் இருந்த அவர்கள், காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் உதவி ஆய்வாளருடன் இருந்த பயிற்சி காவலர்களை தாக்கினர்.

தகவலறிந்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்திலிருந்து மற்ற காவலர்கள் வரவழைக்கப்பட்டு அந்த கும்பலை கைது செய்தனர்.

தொடர்ந்து, நால்வர் மீதும் காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது இடத்தில் தகாத வார்த்தைகளை கொண்டு திட்டியது உள்ளிட்ட எழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details