தமிழ்நாடு

tamil nadu

விழுப்புரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரசாதமாக வழங்கப்பட்ட 20,000 லட்டுகள்

By

Published : Feb 18, 2023, 3:28 PM IST

மகா சிவராத்திரியை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் 20,000 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

Etv Bharat
Etv Bharat

20,000 லட்டுகள் பிரசாதம்

விழுப்புரம் நகரின் திருவிக வீதியில் ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து மூலவரான சிவபெருமானை வழிபடுவது வழக்கம். மகா சிவராத்திரியான இன்று (பிப்.18) நாடெங்கும் உள்ள சிவன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் என விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இக்கோயிலில் பிரோதஷ பேரவையின் சார்பாக பக்தர்களுக்கு 20,000 லட்டுகள் பிரசாதம் வழங்கப்பட்டன. இதற்கான பணியில் பேரவையின் நண்பர்கள், பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் நேற்று முதல் பணியில் ஈடுபட்டு 20 ஆயிரம் லட்டுகளை தயாரித்தனர். இன்று பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

இதையும் படிங்க: Sivalaya Ottam: மகா சிவராத்திரி நாளில் 12 சிவாலயங்களுக்கு ஓடிச்சென்று வழிபாடு.. சிறப்பம்சம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details