விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தேங்காய்பாக்கம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சாராய கேன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் இன்று (நவ. 03) விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் அந்தப் பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், விவசாய நிலத்தில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 555 கேன்கள், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 14 கேன்கள் என மொத்தம் சுமார் 20 ஆயிரம் லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல்செய்த காவல் துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த இருவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ரூ. 23.90 கோடியில் ஏரி, குளங்கள் சீரமைக்கும் பணி தீவிரம்!