நாகை :விழுப்புரம் மாவட்டம் பிள்ளையார் குப்பத்தை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட 25 பேர் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் புகார் ஒன்றை அளித்திருந்தனர். அந்த புகாரில் ”கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சுமார் மூன்று கோடி அளவில் பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பி கொடுக்காமல் ஒன்ஸ் இன் டெக்னாலஜி என்ற நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது.
இந்நிறுவனம் பெயரில் ரூபாய் ஒரு லட்சம் கட்டினால் பத்து மாதத்தில் மாதம் ரூ.18 ஆயிரம் விதம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி 2.63 கோடி ரூபாய் பண மோசடியில் அந்நிறுவனர் சக்திவேல்(எ)ஸ்ரீகாந்த் (43) காஞ்சிபுரம், கௌசல்யா (40) கோலியனூர், ராமசாமி (49) அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாதிராப்புலியூர் ஆகிய மூன்று பேர் ஈடுபட்டுள்ளனர்” எனப் அப்புகாரில் தெரிவித்துள்ளனர்.