விழுப்புரம் மாவட்டம், அம்மையாகரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். கடந்த மாதம் 12ஆம் தேதி இவரது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவிலிருந்த தங்க நகைகள் மற்றும் மின்சாதன பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வந்தனர்.
கள்ளக்குறிச்சியில் கொள்ளையர்களிடமிருந்து 13 சவரன் பறிமுதல்!
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரிடமிருந்து காவல்துறையினர் 13 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு அதேபகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் இருவரும் சின்னசேலத்தை சேர்ந்த ராசு மற்றும் செல்வம் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்ததில், பல இடங்களில் அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் 13 சவரன் தங்க நகை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்கள் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.