தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு - குடியாத்தத்தில் ரயில் தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் உயிரிழந்தார்

ரயில்வே தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குடியாத்தத்தில் ரயில் தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் உயிரிழந்தார் Youth who tried to Take Selfie On Railway Track Was dead ரயில்வே தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
டிக் டாக், ரீல் மோகம் - தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார் குடியாத்தத்தில் ரயில் தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் உயிரிழந்தார் Youth who tried to Take Selfie On Railway Track Was dead ரயில்வே தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

By

Published : May 4, 2022, 8:25 AM IST

வேலூர்:குடியாத்தம் புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (22). இவர் தனியார் கேபிள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு டிக் டாக் ரீல் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இதனிடையே நேற்று (மே.3) குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூர் ரயில்வே நிலையம் அருகே நண்பர்களுடன் சென்ற அவர், அங்கே ரயில்வே தண்டவாளத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஓடும் ரயில் முன் இன்ஸ்டா ரீல்...! உடல் சிதறி பலியான 3 மாணவர்கள்...

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details