திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்துள்ள நெக்குத்தி தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள இருசக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் கடையில் ரோஷன் குமார் (22) என்பவர் வேலை செய்துவந்தார். வழக்கம் போல் தனது வீட்டிற்கு மதியம் உணவு உண்பதற்கு ரோஷன் நடந்துசென்றுள்ளார்.
அப்போது, வேலூரிலிருந்து அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் ரோஷன் மீது மோதியது. இதில், ரோஷன் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் வேகமாகச் சென்றது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காரை துரத்திச் சென்று நெக்குத்தி சுங்கச்சாவடி அருகே மடக்கினர்.
வாணியம்பாடி அருகே கார் மோதி இளைஞர் உயிரிழப்பு அதற்குள்ளாக காரில் இருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் ரோஷன் குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், காவலர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பிஎம்டபிள்யூ கார் சென்னையைச் சேர்ந்த கிரானைட் தொழிலதிபருடைய கார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது, காரை ஓட்டிவந்தது யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:' திரௌபதி படத்தைத் திரையிடக் கூடாது ' - திரையரங்கு உரிமையாளர்களிடம் விசிகவினர் மனு