வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ஆர்.வெங்கடாபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் நேற்று (ஜூன். 19) பரதராமி காவல் துறையினர் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த அரவிந்த் (22) என்பவரைக் கைது செய்தனர். தொடர்ந்து வீட்டை சோதனை செய்ததில் அங்கிருந்து இரண்டு திருட்டு இரு சக்கர வாகனங்கள், ’ஏர்பிஸ்டல்’ எனப்படும் கைத்துப்பாக்கி மற்றும் மூன்று உயர் ரக நாய்க்குட்டிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
வீட்டில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர் கைது
வேலூர்: குடியாத்தம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு: இளைஞர் கைது!
மேலும் தப்பியோடிய அரவிந்த்தின் கூட்டாளிகளை பரதராமி காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண நிதி: தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்