வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இன்று வேலைவாய்ப்புத் துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பாக நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமை மாநில வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர்.
இந்தப் பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்குபெற்றன. இதில் பேசிய அமைச்சர் நிலோபர் கபில், "படித்த இளைஞர்களுக்கு போதிய பயிற்சி இல்லாத காரணத்தினால் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு கிடைக்காமல் உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு சார்ந்த 89 தொழிற்பயிற்சி நிலையங்களும் தனியார் சார்பில் 476 தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டுவருகின்றன. அதில் இணைந்து இளைஞர்களும் மாணவர்களும் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் 55 பொறியியல் சார்ந்த படிப்புகள், 28 பாடப்பிரிவுகள் என பல்வேறு விதமான தொழில் பயிற்சி சார்ந்த பாடப்பிரிவுகளும் உள்ளன. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.