தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஓடும் பேருந்தில் பெண்ணுக்குத் தாலி கட்ட முயன்ற இளைஞர்' - அடித்து நொறுக்கிய பொதுமக்கள்! - ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலிகட்ட முயன்ற இளைஞர்

வேலூர்: ஓடும் பேருந்தில் பெண் ஒருவருக்குத் தாலிகட்ட முயன்ற இளைஞரை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

youngster arrest
youngster arrest

By

Published : Dec 10, 2019, 4:49 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் கல்லூரியில் படிக்கும் போது பழகியுள்ளார். இது நாளடைவில் ஒரு தலைக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அப்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனையறிந் ஜெகன் அப்பெண்ணிடம் தன் காதலைத் தெரிவித்துள்ளார். ஆனால், அப்பெண் ஜெகனின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இன்று காலை அப்பெண் பேருந்தில் சென்று கொண்டிருக்கையில், அவரைப் பின் தொடர்ந்த ஜெகன் அவருக்குத் தாலி கட்ட முயன்றுள்ளார். இதனால் அப்பெண் கூச்சலிடவே பேருந்தில் இருந்த பயணிகள் அவரை அடித்தனர்.
பின் ஜெகனை வாணியம்பாடி காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஜெகனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் பேருந்தில் பெண்ணுக்குத் தாலி கட்ட முயன்றதால் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details