வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன். இவரது மனைவி ஜெயந்தி. இவர் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை! - தற்கொலை
வேலூர் : வாலாஜாபேட்டை அருகே இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
இது தொடர்பாக வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வாலாஜா அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஜெயந்தி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.