தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 23, 2022, 10:58 PM IST

ETV Bharat / state

உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை - வேலூரில் குவிந்த மக்கள்

வேலூர் அருகே அரியூர் தங்ககோவில் வளாகத்தில் ரூ.4 கோடி மதிப்பில் உலகில் மிகப்பெரிய நடராஜர் சிலையை மக்கள் பார்வைக்காக தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மா திறந்து வைத்துள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை
உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை

வேலூர்:அரியூர் ஸ்ரீபுரத்தில் தங்ககோயில் ஆலய வளாகம் அருகில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக ஐம்பொன்னால் ரூ.4 கோடி மதிப்பில் 15 ஆயிரம் கிலோ எடையில் செய்யும் பணி நடைபெற்றது. 23 அடி உயரம் 17 அடி அகலம் கொண்ட இந்த உலகில் மிகப்பெரிய நடராஜர் சிலை அரியூர் தங்ககோயில் விருந்தினர் தங்கும் விடுதி வளாகத்தில் இன்று(அக்.23) மக்கள் பார்வைக்காகத் தங்ககோயில் நிறுவனர் சக்தியம்மா திறந்து வைத்தார்.

இவ்வளவு பெரிய நடராஜர் சிலை உலகில் வேறு எங்கும் கிடையாது, இந்த சிலையானது வேலூருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இதுகுறித்து தங்ககோயில் நிறுவனர் சக்தியம்மா செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஐம்பொன்னால் நடராஜர் சிலை 23 அடி உயரம் 17 அடி அகலம் 15 ஆயிரம் எடைகொண்ட சிலை இங்கு மக்கள் பார்வைக்காகத் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் நடராஜருக்கு தனி ஆலயம் அமைத்து அங்கு பிரதிஷ்டை செய்யப்படும். மேலும் முருகரையும் தங்ககோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைக்கவுள்ளோம். இங்கு லட்சுமி நாராயணி, சொர்ண லட்சுமி, வெள்ளி கணபதி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் உள்ள நிலையில் நடராஜர் சிலை ஆலயத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. விரைவில் முருகர் ஆலயம் அமைக்கவுள்ளதாகக் கூறினார்.

உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை

இதையும் படிங்க:சாதியை சொல்லி திட்டியதாக திமுக பிரமுகர்கள் மீது பாஜக பிரமுகர் புகார்

ABOUT THE AUTHOR

...view details