உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு, வாணியம்பாடி தனியார் மண்டபத்தில், பெண்கள் தினத்தைக் கொண்டாடும் விதமாக விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக, டெல்லி சட்டக் கல்லூரி மாணவி சுவாதி கண்ணா மற்றும் நாட்டின் முதல் சாதி மதமற்றவர் என்ற சான்றிதழைப் பெற்ற பெண் சினேகா ஆகியோர் பங்கேற்றனர்.
வாணியம்பாடியில் பெண்கள் தினம் கொண்டாட்டம் இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சினேகா பேசியதாவது:
இந்தியாவின் முதல் சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை பெற்ற பெண் சினேகா பேட்டி “குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்பது குறிப்பிட்ட மதத்திற்கான போராட்டம் மட்டும் இல்லை, சயமரியாதையோடும் உரிமையோடும் வாழ வேண்டும் என நினைக்கக்கூடிய ஒவ்வொரு மனிதர்களுக்கான போராட்டம் இது .
மேலும், இந்த சட்டமானது இந்திய குடியுரிமை சட்டத்திற்கு நேர் எதிரானது. இது இந்திய குடியுரிமை சட்டம் ஜீவனை அழிக்ககூடிய சட்டம். இச்சட்டத்திற்கு எதிராக அனைத்து மக்களும் மத ஒற்றுமைக்காகப் போராடவேண்டும்.
அதனைத் தொடர்ந்து, இந்த அரசு பெண்களின் பாதுகாப்பிற்கு எதிராக பல நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கும் போது, அந்த பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என இந்த பெண்கள் தினத்தில் எங்களது கோரிக்கையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு தேவை'