வேலூர்: முத்து மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (21). பிஎஸ்சி நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இவருக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, நவ.15இல் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சுமைதாங்கி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (27) என்பவருடன் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் நவ.17 அதிகாலை பெண் வீட்டில் மறுவீடு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே கணவன் வீட்டின் கழிவறையில் புவனேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.