தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கன்வாடி மையம் அருகே பராமரிப்பற்றுக் கிடக்கும் கிணறு - மூட மக்கள் கோரிக்கை! - well insecure vellore

வேலூர்: ஆம்பூர் அருகே காட்டுக்கொல்லைப் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி பகுதியில் பராமரிக்கப்படாத கிணற்றைச் சரி செய்யக்கோரி, கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

well-insecure-vellore

By

Published : Nov 20, 2019, 9:26 AM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காட்டுக்கொல்லைப் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு, முன் பொதுமக்கள் பயன்பட்டிற்காக 70 அடி ஆழத்திற்கு கிணறு ஒன்று தோண்டப்பட்டது. அக்கிணற்றின் அருகே கடந்த 1997ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையமும் அமைக்கப்பட்டது. தற்போது அந்த அங்கன்வாடியில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அங்கன்வாடி மையம் அருகே உள்ள கிணறு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்பாடில்லாமல் இருந்ததால், கிணற்றின் அருகே செடி கொடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது.

பராமரிப்பற்றுக் கிடக்கும் கிணறு

மேலும் கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்கள் சிதைந்து காணப்படுவதால், எந்நேரமும் விழும் அபாயத்தில் உள்ளது. மேலும் அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகள் அக்கிணற்றின் அருகே விளையாடும்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன், அந்தக் கிணற்றை மூடுவதற்கு அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோயிலில் பைரவாஷ்டமி விழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details