தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னைக்குப் புறப்பட்ட காவிரி நீர்! - issue

வேலூர்: ஜோலார்பேட்டையிலிருந்து காவிரி நீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஷ்வரன் இன்று காலை ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பிவைத்தார்.

சென்னைக்கு சென்றது காவிரிநீர்

By

Published : Jul 12, 2019, 9:14 AM IST

Updated : Jul 12, 2019, 12:08 PM IST

தலைநகர் சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் போர்க்கால அடிப்படையில் ஜோலார்பேட்டை காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட உபரி நீரை சென்னைக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டது.

அதன்படி,காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட உபரி நீரை சென்னைக்கு கொண்டுவர மேட்டுசக்கரகுப்பம் பம்புஹவுஸ் எனப்படும் நீர்த்தேக்க தரைமட்ட தொட்டியிலிருந்து 3.5 கிலோ மீட்டர் தூரம் புதைக்கப்பட்ட ராட்சத குழாய்கள் மூலம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்படும்.

அங்கு ரயில் டேங்கர்களில் நிரப்பி நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லும் பணித் திட்டம் இரண்டு வாரங்களுக்கு முன் தொடங்கியது.

அப்பணியை அலுவலர்கள் வெற்றிகரமாக நேற்று முடித்தனர். பின்பு சோதனை ஓட்டங்களையும் முடித்து, நேற்றே எண் WAG.5HA 23907 என்ற ரயிலில் இருக்கக்கூடிய 50 வேகன்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது.

இன்று காலை ரயில் புறப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று அறிவித்தார். அதன்படி இன்று காலை ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சரியாக 7.15 மணிக்கு தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன், ரயில்வே அலுவலர்கள் கொடியசைத்து தண்ணீர் ரயில் சேவையை தொடங்கிவைத்தனர்.

முதல்கட்டமாக தற்போது 25 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நடை ஒன்றுக்கு தலா 25 லட்சம் லிட்டர் வீதம் நாள்தோறும் நான்கு நடைகளில், ஒரு கோடி லிட்டர் தண்ணீர் சென்னை வில்லிவாக்கம் ரயில்நிலையம் செல்லும்.

இந்த ரயில் 11 மணிக்கு சென்னை சென்றடையும் எனவும் அங்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தண்ணீர் ரயிலை வரவேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னைக்குப் புறப்பட்ட காவிரிநீர்

சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டுள்ளதால் சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்க முடியும் என அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

Last Updated : Jul 12, 2019, 12:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details