தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியாத்தம் மோர்தானா அணையில் தண்ணீர் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வேலூர் குடியாத்தம் அடுத்துள்ள மோர்தானா அணையில் தண்ணீர் அதிகரித்துள்ளதால், மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தண்ணீர் அதிகரித்து காணப்படும் மோர்தாணா அணை
தண்ணீர் அதிகரித்து காணப்படும் மோர்தாணா அணை

By

Published : Sep 30, 2020, 10:10 PM IST

வேலூர்: குடியாத்தம் அடுத்துள்ள மோர்தானா அணையில் தண்ணீர் வெளியேறத் தொடங்கியதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள மோர்தானா அணை, மிக முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள 34 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தொடர்மழையின் காரணமாக நீர் நிரம்பிவந்தது.

இந்நிலையில் நேற்று (செப். 29) பெய்த கனமழை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செப். 30) மோர்தானா அணை தனது முழுக் கொள்ளளவான 34 அடியை தாண்டி நீர் நிரம்பி வழியத்தொடங்கியது.

தண்ணீர் அதிகரித்து காணப்படும் மோர்தானா அணை

இந்த அணையிலிருந்து வெளியேறும் நீர், குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில் தேங்குகிறது. இதனால், கவுண்டன்ய மகாநதியின் கரையோரம் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பவானிசாகர் நீர்மட்டம் உயர்வு: சிசிடிவி மூலம் ஆன்லைனின் கண்காணிப்பு!

ABOUT THE AUTHOR

...view details