வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துதிப்பட்டு திருமால்புரம் பகுதியைச் சேர்ந்த அஞ்சலி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆம்பூர் எல் மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடந்த சிலமாதங்களிலே சரவணன் இறந்து விட, அரசாங்கத்தில் இருந்து கிடைக்கும் விதவை உதவித்தொகை பெறுவதற்காக துத்திப்பட்டு வருவாய் அலுவலர் ஜெயக்குமரிடம் மனு ஒன்றை அளித்தார்.
பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வருவாய் ஆய்வாளர் இடைநீக்கம் - district revenue Administrative Officer Suspended in thirumalpuram
வேலூர்: விதவை உதவித்தொகை பெற விண்ணப்பித்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Village Administrative Officer Suspended in thirumalpuram
மனுவை பெற்றுக்கொண்ட ஜெயக்குமார், தொலைபேசி வாயிலாக அஞ்சலிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அஞ்சலி, மாவட்ட வருவாய் ஆய்வாளரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமாரை மாவட்ட வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.