வேலூர்:மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி வேலூர் காளிகாம்பாள் கோவில் தெருவைச் சேர்ந்த சிவா என்பவர் அவரது கடையின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்தார்.
இந்நிலையில் சிமென்ட் சாலை அத்தெருவில் போடப்பட்ட நிலையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கும் சேர்த்து சிமென்ட் சாலை அமைத்தனர். இதனைக் கண்ட வாகனத்தின் உரிமையாளர் இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார்.
இருசக்கர வாகனத்துடன் சேர்த்து சாலை அமைப்பு தொடர்ந்து இந்த புகைப்படம் வைரலாக பரவிய நிலையில், இந்த அலட்சியப்போக்கிற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் குறித்து தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை எழுப்பி நிலையில் வாகனங்களை அப்புறப்படுத்தாமல் சிமென்ட் சாலை அமைத்த உதவி பொறியாளர் பழனியை மாநகராட்சி ஆணையர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:கோகுல்ராஜ் கொலை வழக்கு: தண்டனையை ரத்து செய்யக்கோரிய மனுவின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு