இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், " வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் 2ஆம் தேதி வரை இந்த ஆப்ரேஷன் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் 2,859 இடங்களில் நடைபெற்ற வாகன தணிக்கையில் 15,975 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது."
மேலும், "முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் கீழ் 171 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 109, 110 கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 41(1) பிரிவின்கீழ் 1,160 நபர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது