தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 9, 2020, 7:44 AM IST

ETV Bharat / state

'நீங்க வர வேண்டாம்... நாங்களே வர்றோம்' வீட்டிற்கே சென்று புகார் மனுக்களை பெற்றுக்கொள்ளும் வேலூர் மாவட்ட காவல்துறை!

வேலூர்: கரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்களின் புகார் மனுக்களை வீட்டிற்கே வந்து பெற்றுக்கொள்ளும் முறையை மாவட்ட காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

"நீங்க வர வேண்டாம்... நாங்களே வர்றோம்" வீட்டிற்கே சென்று புகார் மனுக்களை பெற்றுக்கொள்ளும் வேலூர் மாவட்ட காவல்துறை !
"நீங்க வர வேண்டாம்... நாங்களே வர்றோம்" வீட்டிற்கே சென்று புகார் மனுக்களை பெற்றுக்கொள்ளும் வேலூர் மாவட்ட காவல்துறை !

இது குறித்து தெரிவித்துள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார், 'கரோனா பரவல் காரணமாக பொதுமக்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புகார் மனுக்களை புகார்தாரரின் வீட்டிற்கே சென்று விசாரிக்கும் முறையை வடக்கு மண்டல காவல் துறைத்தலைவர் நாகராஜன் அறிவுறுத்தலின்படி, வேலூர் சரக காவல் துறை துணைத்தலைவர் காமினி உத்தரவுப்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் வரும் புகார் மனுக்களை நேரடியாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ பெற்றுக் கொள்ளப்படும்.

புகார் மனுக்களின் தன்மைக்கேற்றவாறு மனுதாரரின் இடத்திற்கே சென்று விசாரணை செய்யப்பட்டு, அதற்குண்டான தீர்வு காணப்படும். மேலும், தினசரி வரும் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...நில எடுப்பு அசல் வழக்குகளை விரைந்து தீர்வு காண நடவடிக்கை - சிப்காட்

ABOUT THE AUTHOR

...view details